பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 57 பொக்கென்று பட்டொழிந்து பொடியாக, வஞ்சனையாய் மதபேத வார்த்தைசொலி நம்மிடையே நஞ்சை உமிழ்ந்துவரும் நாகத்தின் தலை நசுக்க நாமெல்லாம்- . ஒன்றாவோம்! இன்றுமுதல் உழைப்போம் ! உலகினர்முன் குன்றாப் புகழ் நிறுவிக் . குலவைக் குரலிடுவோம் ! பொன்றச் சுதந்திரத்தின் பூரணத்தை எய்திடுவோம் ! ஆதலினால்- இந்தத் திருநாளில் இன்புற்றோம் ; இனிமேலும் அந்தப் பெருநாளும் அணித்தாகச் செய்வதற்குச் சிந்தை துணிந்தொன்றாய்ச் சேர்ந்திடுவோம், செகத்தீரே ! ஒன்றாய்ச் சேர்ந்திடுவோம் செகத்தீரே ?