பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவடிவால், கவிவடிவால் காட்டிவிட்டுப் போயினன்காண்! கலைவடிவாய்க் காட்டியதோர் கவியின் திருக்கருத்தின் நிலை என்ன ?... . ஒரு நிமிஷம் நினைவூட்டிப் பார்த்திடலாம்.... அஞ்சுவதற் கஞ்சுவது அறிவுடைமை என்றுரைத்த அஞ்சொற் கவிவாக்கும் அறிவோம் யாம்; . என்றாலும் நெஞ்சிற் பலகவலை நித்த நித் தம் பெருக்கி அஞ்சி உயிர்சுமத்தல் அறிவுடைமைஆகிடுமோ ? துஞ்சி மடிந்திருத்தல் துணிவுடைமை ஆகிடுமோ? பஞ்சையராய், பாமரராய், பயத்தின் அடிமைகளாய், - கிஞ்சித்தும் வீரமிலாக் கீழாம் பிறவிகளாய் செஞ்சொல் தமிழ்க்குலத்தோர் , சீரழிய லாகிடுமோ? கப்பிக் கவிந்துவரும் கவலையினை, நெஞ்சத்தை அப்பிக் கிடந்தலைக்கும்