பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் அச்சத்தை, மன்னுலகைக் குப்பைக் குழியாக்கும் கூனச் சிறுமையினைப். போக்காதிருந்து நிதம் புலம்புவதும், நாளெல்லாம் சாக்காட்டுப் பாதையிலே சாடுவதும் நலமாமோ? இல்லையில்லை இல்லையென்றான் எங்கள் பெருவழுதி ! - தொல்லை தரும் துயரைத் துடைக்க, மீன்குலத்தின் எல்லையிலாப் பேதைமையின் இருளைப் பிளந்தெறிய, சொல்லில் கிரியைகளில் தூயவொளிக் கதிர்விரிய, நல்லுரிமைப் போரில் நமனோடும் போட்டியிடத் துணியும் பெரும் வீரத் தோன்றல் சிலருண்டு. அவரால்தான்--- இனியும் இந்நாளும் இவ்வுலகு நிலைத்திருக்கும் என்றுதான் சொன்னான் எங்கள் பெருவழுதி. " - பெருவழுதி சொல்லிவைத்த பேருரையை இனிதேற்று