பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 61 அறிந்துணர முனைந்தாலோ? அய்யய்யோ !... இன்று நமைத் தின்று அரித்துவரும் தீமைகளும், சிந்தைதனைக் - கொன்று குலைத்துவரும் கோணல் சிறுமதியும் எண்ணில் அடங்கிடுமோ ? எத்தனையோ?... எத்தனையோ ?... சாதி சமயமெனும் சழக்கால் மனப்பூசல் ஆதிப் பழமையெனும். அறியாமை, அறிவிழந்த கண்மூடிப் பழக்கங்கள், காரிருட்டு வாழ்க்கையிலே மண்மூடிப் போகின்ற மானிடங்கள், வாழ்க்கையெனும் போரில் தலை நிமிர்ந்து ' போராடும் தெம்பிழந்து ' நீரிற் குமிழியென : நெஞ்சுடையும் பஞ்சையுளம், மிடிமையெனும் சாகரத்தே மிதந்தலையும் தெப்பமென . அடிமைச் சிறுவாழ்வில் : அலைக்கழியும் மன்னுயிர்கள்... இவ்வாறாய்- - எண்ணில் பல இன்னல் இருளில் கிடப்போரின் - கண்ணைத் திறந்து, வழி காட்டி, முன் நடந்து, :