பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ரகுநாதன் பண்ணரிய நற்பணிகள் பலவும் புரிந்து, உலகோர் வாழ்வை வளம்படுத்தி மானுடத்தின் புல்லடிமைத் தாழ்வைத் தகர்த்தெறிந்து, தாரணி வாழ்மானிடர்கள் பீடுநடை நடக்கும் பெற்றிக்காய், தம்முயிரை ஈடுவைத்துப் போராடும் இதயத்தோர் இவ்வுலகில் இருந்தால், இருப்பதனால் உலகம் நிலைத்திருக்கும் ; உலையா திருந்துவரும் ; திலகமென அவர் திருப்பேர் தினமும் நிலைத்திருக்கும். இவ்விதமாய்--- இலகு புகழ்சுமந்து எந்நாளும் இறவாத உலகப் பெரியார்கள் ஒரு சிலரோ ?... பலர் உண்டு . வெளி நாட்டார் நம் நாட்டை வேட்டைக் களம் ஆக்கிக் களியாட்டம் ஆடி நின்ற காலத்தே, அன்னவரை வால்பிடித்து, முகஸ்துதியாய் வக்கணைகள் பேசி, அவர்