பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 63 கால்பிடித்து, தம்முயிரைக் கருப்பட்டி யாய்ப் பேணி பாரதத்து மன்னரினம் பவிசிழந்த நாளையிலே..., அன்னியரை-... - நேரெதிர்த்து, பரித்தியாக நெருப்பில் குதித்து, அவர்மேல் போரெதிர்ந்து வீரப்போர் புரிந்து உயிர் நீத்த தீரன் கட்டபொம்மன் திறலை நாம் அறியோமா? . மாணத்தின் சந்நிதியில் மானத்தைக் காப்பதற்காய் திரணமென உயிர்கொடுத்து தேசக் கொடிகாத்த - திருப்பூர்க் குமரனெனும் சீராளன் தன் திறலும் தெரியாதோ, நமக்கெல்லாம் ?, தடிப்பேறி மரத்திருந்த தமிழர் உளந்தனிலே துடிப்பேற, தேசபக்தி துள்ளிப் பொறி பறக்க, விதேசியரின் கப்பல் வியாபாரத்திற் கெதிராகச் ' சுதேசித் தனிக் கப்பல் - தோற்றுவித்த தேசபக்தன் சிதம்பரனார் தம்வீரச் செயலும் நாம் அறியோமா ?