பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் வீட்டில் உலையேற்றும், . விளக்கேற்றும் செலவுக்காய், வேட்டி துணி மணிக்காய், மேற்செலவுச் சில்லரைக்காய் - பாட்டை, பைந்தமிழைப் பணயம் வைத்து, தம்முயிரை ஊட்டி வளர்த்துவந்த கவிஞர் ஒருசிலபேர் நாட்டை மறந்து, மக்கள் நலத்தைத் துறந்துவிட்டு, சீட்டுக் கவிபாடிச் செய்ப்புள் புலமையினால் தமிழை அலைக்கழித்துத் தட்டழிந்த காலத்தே, அமிழ்த மனையதமிழ் அன்னை, விலங்கறுக்கத் தோன்றி, தமிழுலகின் தோளுயரச் செய்யவந்த தோன்றல் இவன் என்ன மிடிமைப் பேய்க் கணங்கள் மிரட்டுகின்ற வேளையிலும் அடிமைத் தளையறுக்கும் ஆவேசக் கனல் என்ன வெள்ளையர்தம் தோலாம் வெளுப்புக்குச் சலாமிட்டு உள்ளம் குமைந்தவரின் உரிமைக் குரல் என்ன -- நல்ல தமிழ்க்கவியால் நாட்டை உயிர்ப்பித்து,