பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 55 புல்லடிமை தன்னைப் போக்கும் வலியளித்த சொல்லின் திருக்குமரன் சுப்ரமண்ய பாரதியை எல்லோரும் அறியோமா ? அறிவோம் ; நன்கறிவோம், அவரெல்லாம் நம்முளத்தே உரியதொரு இடம்பெற்ற உண்மையினை யும் அறிவோம். இன்னபலர்- தன்னலத்தைக் கருதாது தாய் நாட்டின் நலம்கருதி, பன்னரிய தியாகங்கள் பலபுரிந்தார்; அதனால்தான் இன்னுமிந்த மன்னுலகு இருக்கின்ற உண்மையினை, மன்னுலகு வாழ்ந்துவரும் மருமத்தை, மாட்சிமையை உன்ளியுணர்ந்தோம் நாம் உணர்ந்தறிந்தே- அன்னவரின் நற்பணியை அன்னவர்தம் லட்சியத்தை தன்னலத்தைக் கருதாத ' தகைமையினை, வீரத்தை இந்நாளும் நாம் போற்றி - இதயத்தே ஏற்போமேல், அஞ்சுவதே தொழிலாய்