பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓய்ந்திருக்க மாட்டோம் ஓய்ந்திருக்க மாட்டோம்-தலை சாய்ந்திருக்க மாட்டோம்! - வேய்ந்த கூரையின்றி நடு வீதியிலே தூங்கிக் காய்ந்த கும்பியோடும்-முழக் கந்தல் துணியோடும் மாய்ந்து மக்கள் வாடும்-புன்மை மாய்ந் தொழியு மட்டும் ஓய்ந்திருக்க மாட்டோம் தலை சாய்ந்திருக்க மாட்டோம்! 1. காத்திருக்க மாட்டோம் - நெ களைத்திருக்க மாட்டோம்-உளம் சளைத்திருக்க மாட்டோம்!" உழைக்கும் உரம் பெற்றும் நெஞ்சில் ஊக்க மிருந்தும் மக்கள் பிழைக்கும் மார்க்கமின்றி-பிச்சை பிச்சை யென்றே நம்மை அழைக்கும் கோரம் உலகில்-முற்றும் அழிந் தொழியு மட்டும் " களைத்திருக்க மாட்டோம்-உளம் சளைத்திருக்க மாட்டோம்! 2 ஆவி சோர மாட்டோம்-மன அமைதி காண மாட்டோம் ! பூவுலகில் நெல்லை-முப் . போகம் விளைத்தோர்கள்