பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் அறிந்துணர்ந்தால்- பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டுக் கெல்லாமுக் கப்பாலோர் இருளடைந்த கானகத்தே காட்டுக் குரங்கினத்தின் கடைக்குட்டி வாரீசாய், நீட்டி நிமிர்ந்தெழுந்து நின்றிட்ட நாள் முதலாய், வேட்டை பலவாடி . வெம்பசியைத் தானாற்றி, கூட்டுக் களியினிலே குலக்கொடியைக் காப்பாற்றி, ஆலாய் விழுதோடி, அருகாய் வேரோடி காலாந்தரத் தறிவு கனிந்து கனிந்தொளிர நீரை, நெருப்பை, நிலத்தை, நீள்விசும்பை, பாரைப் பகுத்தறிந்த - பண்டை மனிதன்முதல் இன்றைக்கு - நம்மிடையே வாழ்ந்துலவும் நாகரிக மாந்தர்வரை அம்மம்ம! நம்வாழ்வை அறிவென்னும் மணிவிளக்கால் செம்மையுறச் செய்ததெலாம் செப்பி முடிவுறுமோ ? செப்பி முடிவதெனில் சிறியேன் பிழைப்பேனா?