பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 69 உலகத்தே உற்பவித்த உயிர்ராசி யாவினிலும் - இலகுபுகழ் வேய்ந்த இமயக் கொடுமுடியாய் வளர்ந்துற்ற மானிட்டர்தம் வாழ்க்கைப் பெரும்போரில் - தளர்ந்துற்றுப் போகின்ற தருணமெலாம், அறிவென்னும் அளந்தறியாப் பேரொளியால் : ஆராய்ச்சி யின்பயனாய், அஞ்ஞானம் சூழ்ந்திருண்ட அகவீருளைக் குடியோட்டி, விஞ்ஞானம் என்றுசொலும் விந்தைப் பெருவலியால் மெஞ்ஞானம் கற்றறிந்து விளைத்திட்ட வெற்றியெலாம் எண்ணில் அடங்கிடுமோ? எத்தனையோ ? எவ்வளவோ ! அவையெல்லாம்- வையத்தே நம் வாழ்வை வளம்படுத்தி வந்ததற்கு ஐயமுண்டோ ? அன்றாடம் அறிந்துணர்வ தல்லேயோ? எந்திரத்து மந்திரத்து எVணிபோல் தன்னுடைய 'அந்தரங்க விந்தையெலாம் அறிந்துணர வொட்டாது,