பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7) ரகுநாதன் தந்திரமாய் நமையெற்றித் தருக்கிச் செருக்கி நின்ற சுந்தரியாம் இயற்கையெனும் சோபிதஞ்சேர் மோகினியின் பூதப் பெருந்தோற்றப் பொலிவின் ரகசியத்தை , - நீதி நெறிமுறையை நியதி வழிவகையை, மேதினியில் அறிவாற்றல் மேதையினால் கண்டவள்தன் காதல் உளங்கவர்ந்த காதையெலாம்- ஓதற் கெளியனவோ ? .", உண்மைகளும் ஓர் சிலவோ? பொங்கிப் புடை புடைத்துப் பூரித்து, விம்முற்று, கங்குகரை மீறிவரும் காட்டாற்றின் நீர்த்தொகையைத் தேக்கி நிறுத்தி, அணைத் தேக்கம் புலப்பலவும் ஆக்கிப் படைத்துப்பின் ஆயிரங்கால் வழிபாய்ச்சி செந்நெல் வயல்வெளியில் - செங்கரும்புத் தோட்டத்தில் . பொன்னை விளைவித்துப் - பூரிக்கும் விம்மிதமும்-...