பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் சீறிப் புகை நாறும் 'செந்தழலும் தீச்சாறும் ஊறிப் பரந்தோடும் உலகத்துப் பிலவாயைக் கீறிப் பிளந்துள்ளே கீழிறங்கி, ஆங்குஉரு மாறிக் கிடந்தொளிரும் ' மணியை, பசும்பொன்னை, சீரும் சிறப்புற்றுச் செய்யும் பல தொழிற்கும் பாரிவள்ளல் போலுதவிப் பசியாற்றும் நிலக்கரியை வாரிக் கொணர்ந்திந்த - வையம் குவிப்பதுவும்~ ஆவென்று வாய்பிளந்து அலைக்கரங்கள் தாம் புடைத்துத் தாவிக் குமுறி யெழுந் தார்ப்பரிக்கும் சாகரத்தும், காற்றும் மழையிடியம், . கண்பறிக்கும் மின்வீச்சும் கூற்றுவன் போல் குடிகொண்டு குலைநடுக்கும் விண்ணகத்தும்- காடும், மலைக்கடவும், கானாறும், பனிப்புயலும் கூடிநிற்கும் இந்தக் குவலயத்து நிலப்பரப்பும் எண்ணிறந்த வாகனங்கள் என்றும் திரிந்துவரப் .