பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் பண்ணி, உலகத்தின் பலதேச மக்களொடும் , நல்லுறவும் நட்புறவும் நாளும் வளர்ப்பதுவும்- பிரித்தெடுக்க அரிதென்று பேசிவந்த அணுப்பொருளை உரித்தெடுத்து, அதன் வலியை உலகுணரச் செய்துவிட்ட இருபத்தாம் நூற்றாண்டின் இன்றை அறிவாளர் திருப்பணியும்-- கட்புலனும் அறியாது காலனைப்போல் நம்முடம்பின் உட்புகுந்து உயிர்குடிக்கும் உக்கிரஞ்சேர் மின்சாரம் தன்னை அறிந்து, அதனின் சக்தி மகத்துவத்தின் வேகம் அறிந்து, அந்த விந்தை வலிமையெலாம் ஏகம்ப வாணனுக்கு - ஏவல் செய்த பூதமென நம்மவர்க்கு, வீட்டில் உலையேற்ற, விளக்கேற்ற, வேர்த்துடலம் வட்டமுறின் மேல்விசிறி வாட்டமிட்டுத் தான் சுழற்ற, மற்றிங்கு- கூட்டமிட்டு நாமெல்லாம் கூடி நிற்கும் கவியரங்கின்