பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 73 பாட்டொலியைத் தமிழருக்குப் பரிமாறிச் சேவைசெய், இன்னபிற- எண்ணிறந்த விந்தையெலாம் இயற்றி, நம்மவர்க்குக் கண்ணறிந்த தெய்வதம்போல் கைகொடுத்து நின்றுதவக் காண்பதுவும்~ ஆன இவையெல்லாம் அறிவின் பேராற்றல் அளித்த திருவருளின் செறிவன்றோ ? அறிவின்றேல்- மானிடர்தம் புவிவாழ்வில் மகிழ்வுண்டோ ? மலைக்காட்டுத் தேனிகர்த்த செந்தமிழின் தீஞ்சுவையும் தானுண்டோ ? காவியங்கள் உண்டோ ? இக் கவியரங்கும் உண்டோமோ ? ஓவியங்கள் சிற்பமெலாம் " உருப்பெறுவ துண்டுகொலோ? ஆதலினால்- பூவுலகில் நம்வாழ்க்கை பொலிவுற்று வளம் பொங்க ஆவியென நிற்பதுவும் அறிவன்றிப் பிறிதாமோ?