பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் என்றாலும், - இன்றுலகில் வீட்டின் இருள் விலக்கும் விளக்கொளியை, விட்டத்து மோட்டில் சொருகித்தீ . மூட்டுகின்ற மூடரைப்போல் பேரொளியாம் அறிவால் நாம் பெற்ற பயனையெலாம். போரடுத்து மக்கள்தமைப் பூண்டோடு வேரறுக்கும் சீரழிவுப் பாதையிலே செலுத்துகின்ற புன்மையெலாம் நீரறிவீர் ! என்றாலும், அறிவின் பேராற்றல் அளித்த செல்வமெலாம் - குறிவைத்து மக்கள் தமைக் கொன்றொழிக்கும் கொடுமைக்கோ அணுவைப் பிளந்தெறிந்த ஆற்றலெலாம் மக்களினை அணு அணுவாய்ப் பிளந்தெறியும் அநியாய் அழிவுக்கோ ? இல்லை இல்லை என்றே நாம், ஏகக் குரலெழுப்பிச் சொல்லும் மனம் படைத்தோம் ! ஏனென்றால்- தக்கது ஈதென்றும்