பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 75 தகாதது ஈதென்றும் ஒக்கத் தேர்ந்துன்னி - 1 உண்மை தெரிந்துணரா மக்களையும் விலங்கென்றே மதித்திடுக என்றுரைத்த கம்பத் திருநாடன் கால்வழியில், அறிவென்னில் சென்ற இடத்தாறே செல்லாது, தீதொறுத்து, " நன்றின்பால் உய்ப்பதுவே நல்லறிவு என்றுரைத்த' வள்ளுவனார் தம்வழியில் வந்தவர் நாம் ! ஆதலினால்- ஆக்கும் வலிபடைத்த அறிவை, அழிவுவழி போக்குகின்ற சிறுமையெலாம் போக்கும் வகையறிந்து, வானுலகம் என்றுரைக்கும் வளமார்ந்த பொன்னுலகை , மானுடர்கள் வாழுமிந்த வையகத்தே தோற்றுவித்து, விஞ்ஞானம் என்கின்ற விந்தைப் பெருவலியால் அஞ்ஞானப் பொய்மையெலாம் அடியோடு குடியோட்டி,