பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் நாவுலர்ந்து வாடி-வறுமை நரகில் வீழ்ந்து துஞ்சிச் சாவுலகம் நாடும்-தீமை சாய்ந்தழியு மட்டும் ஆளி சோர மாட்டோம்-மன' அமைதி காண மாட்டோம்! மருண்டு நிற்க மாட்டோம்-கண்கள் இருண்டு நிற்க மாட்டோம் ! திரண்ட தோளின் வலியால்--பலர் தினம் படைக்கும் பயனைச் சுரண்டி வாழும் சில்லோர்-தின்று சொர்க்க வாழ்வு வாழும் இரண்டு பட்ட தன்மை -- மாறி இன்பம் காணு மட்டும் , மருண்டு நிற்க மாட்டோம். கண்கள் இருண்டு நிற்க மாட்டோம்! கண்ணுறங்க மாட்டோம்-எங்கள் கருத்துறங்க மாட்டோம்! கண்ணிருந்தும் குருடாய் இரு காதிருந்தும் செவிடாய் . . எண்ணெழுத்து அறியா-பாழ் இருளி லுழன்று வாழ்வோர் விண்ணை முட்டும் அறிவின்-ஒளி ' விளக்கம் ஏந்து மட்டும் கண்ணுறங்க மாட்டோம்.-எங்கள் கருத்துறங்க மாட்டோம்!