பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி திருநாள் கோவைத்திரு நகரில் கூட்டமிட்டுப் பாட்டிசைத்து நாவலிக்க நாவலிக்கும் நாவலரே !----பாவருக்கும் வந்தனங்கள் சொல்லி வாசிக்கும் எம்கவியைச் சிந்தனையில் கொள்வீர் தெளிந்து', நெல்லைப் பதியுடையான் நீடுபுகழ் அம்பலத்தான் ஒல்லை இடைசெவலாம் ஊருடையான்--சொல்லுக்கு அழகேற்றும் அழகிரியான் அணிசெய்யக் கேட்டிடுவீர் பழகு தமிழ் எம்மிரட்டைப் பா. ராவிலே கண்விழித்து ரயிலில் வரும்போது, டாவிலே கண்வைத்துப் பாடினோம்-நாவிலே வந்து சரஸ்வதியார் வாழாக் கலியுகத்தில் சொந்தக் கவியாய்த் துணிந்து. காட்பாடி ஜங்ஷனிலே காப்பியின்றி டீகுடித்து ராப்பாடியArய் நாங்கள் ராத்திரியில்-பாப்பாட் எதுகையொடு போராடி எதிர்க்கட்சி தானாடி இதுவுரைத்தோம் கேட்பீர் இனி. யாப்பெதுகை என்றும் யமகம் திரிபென்றும் ஆப்பறைந்து தமிழ்த்தாய்க்கு அறம்பாடும்--தோப்புக் கரணவித்தைப் புலவருக்குக் கவியரசன் பாரதியான் மரணமென வந்தானம் மா, கம்பனுக்குப் பின்னாலோர் கருவேப்பிலங் கன்றாய் செம்பொற் கவிச்சுரங்கச் செல்வமாய்--செம்பாகப் பாட்டிசைத்து நந்தமிழைப் பாலித்து மெய்ப்புகழை நாட்டியதும் பாரதியின் நா. அலே கதிரியில் தானா?