பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 73 எல்லோரும் மன்னரென்று எம்கவிஞன் அந்நாளில் சொல்லாறச் சொல்லிட்ட தொன்மொழியை---மல்லாடி நாமுனைந்து இச்சகத்தில் நனவாக்கி தாட்ட்டினுக்குச் சேமம் விளைப்பதுவே சீர். மாமாய வேதாந்த மயக்கைக் கருவறுத்து போமாறு மற்றதளைப் போக்குவோம்-ஆமாம்காண்! செத்த பிறகோ சிவலோகம் ! இல்லை ; அதை இத்தரையில் தோற்றுவிப்போம் யாம்.. 15, மூளை கெட்ட இச்சமுக முறையதனை நாம் மாற்றி ஏழைபணக் காரரென்பார் இல்லையென்போம் . -கோழைமனத் தாம்சங்கள் ஏதுமின்றி தாரணியில் பொதுவுடைமை நாம் சமைக்க எண்ணுவுமிந் நாள்; செத்த குரலெடுக்கும் சீவனற்ற செய்யுளையும் சத்தற்ற பாடலையும் சாகடிப்போம்-நித்த நித்தம் கம்பன் கவிகற்று, பாரதியார் காவியம்போல் - அம்புவிக்கு நாளும் அளித்து நாடு செழித்தோங்க, நல்லோர்கள் வாழ்ந்திருக்க, பாடுபடுவோன் பலம் பெருக-~-வீடெல்லாம் செல்வம் பெருக, திக்கெட்டும் பஞ்சமற மல்கிடவே நாட்டின் வளம். இத்தினத்தில் நாமிங்கு எடுக்கும் சப்தமிது ; ஒத்துழைக்க வாருங்கள் ஓடோடி !---சத்தமின்றிக் கம்மென்றிருந்து கவிபாடக் கேட்டவரே.! கம்மென் றிருந்துவிடா தீர்! : . 16, |.. 1949