பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் மனசைப் பறிகொடுத்து வானாட்டைத் தானிடிக்கும் வாய்ப்பந்தல் போடாதீர் ! 3 கச்சேரி வாசலிலே கணக்கு, புரோநோட்டு, குச்சுக்கு ஒத்தி, குடிமனைக்கு அடமானம் வச்செழுதும் மாராசன் மனசை, பேனாவைப் பிச்சைப் பிழைப்புக்காய் பேரங்கள் பேசவில்லை ! நீரோ- உம்மை, உம்பேனாவை ஊத்தைக் கருத்துக்களை, உள்ளத்தை, அச்சகத்துப் பெம்மான் திருவளத்துப் பிரியத்துக் கொத்திவைத்துச் சன்மானம் ஏதுமின்றிச் சலியா துழைக்கின்றீர்? வரகரிசிச் சோற்றுக்கும் வழுதுணங்காய் வாட்டுக்கும் முரமுரெனப் புளித்த மோருக்குமாய்த் தவித்து, கும்பிக் கொதிப்பைக் குறைக்கக் கவிபாடி அம்புவியில் வந்துதித்த அவ்வைப் பெருமகளும்,