பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் சொல்லுக்குச் சோர்வேது? சுவைச் சொல்லே யானாலும் சல்லி வரவுண்டோ ? சாற்றுமையா! நித்தம் ஒரு யமகண்டம்" நேர்ந்து வருங் காலத்தில் சத்திய சோதனை உம் சக்திக்குத் தாங்காது ! புத்தகத்தை ஏமாந்து புத்தி கெட்டுத் தானமிட்டு, டிபனுக்காய், மாலையிலே தேத்தண்ணீர் சில்லரைக்காய் டவுணுக்குச் சென்றுவர டிராம் வண்டிக் காசுக்காய் தவணைப் பணம் பிரிக்கும் தன்மையிலே நித்த நித்தம் காவடிகள் தூக்கிக் கால்கள் சலியாதீர் ! தேவடியாள் பிழைப்புக்குத் தியாகமென்ன கேட்டுக்கு ? உம்முடைய- வான்முகட்டைக் கிழித்து வளர்ந்தோங்கும் லட்சியங்கள் நான்முகனும் கண்புதைத்து நாணமுறும் படைப்புக்கள், கூனக் கொடுமையினைக் குடியோட்டி, சமூகத்தை ஆனை நடை நடக்க