பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் $5 அறிவூட்டும் சித்திரங்கள், பண்பாடு, தமிழ்மரபு பாவம், கலாசாரம் எல்லாம் இருக்கட்டும்; இல்லையென யார் சொன்னார் ? அவையெல்லாம்-- சீவிக்கத் திறனுண்டேல், செல்லரித்துப் போகாமல் - பாவிக்கத் திறனுண்டேல், பலமுண்டேல், உயிருண்டேல் சாவைத்தனி யெதிர்த்து 'சகத்திலுயிர் தரியாதா ? ' ஆனாலோ ?-- - நாளைக்கு உம்முடைய சீட்டுக் கிழிந்துவிட்டால், சீவன் பிரிந்துகட்டை நீட்டி நிமிர்ந்து விட்டால், நிமலன் அடிசேர்ந்தால் போட்டுவைத்துப் போகப் பொருளுண்டா ?" ஆதலினால் , ரேட்டைக் குறைக்காதீர்! லெச்சைகெட்டுப் போகாதீர் ! ஓட்டைப் படகேறி , உள்ளமுங்கிச் சாகாதீர்! ஆதலினால் சொல்லிவிட்டேன் சோத்துக்கு வழிதேடும் சொன்னபடி கேளும்! போய்வாரும்!.. மறக்காதீர் ! போய்வாரும் ! 1946