பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் ஒண்டி நிற்க மாட்டோம்--உறக்கம் அண்டி நிற்க மாட்டோம்! குண்டு மாரி வீசி-மக்கள் குலத்தைக் கொன்று தின்று கண்டு முதலில் லாபம்--கரணும் கயவர் சூழ்ச்சி வென்று எண்டிசையும் சாந்தி-நின்று என்றும் நிலவு மட்டும் ஒண்டி நிற்க மாட்டோம்-உறக்கம் ) அண்டி நிற்க மாட்டோம் ! தங்கி நிற்க மாட்டோம்_பின் , தங்கி நிற்க மாட்டோம் ! எங்கள் சக்தி யோர்ந்தோம்-இனி இன்பம் காண்போ மென்றே : பொங்கி யெழும் மக்கள்-வர்க்க போத ஞானம் பெற்றுச் சங்க நாதம் செய்யும்-அந்தச் சத்தம் கேட்கு மட்டும் தங்கி நிற்க மாட்டோம்---பின் தங்கி நிற்க மாட்டோம்! 1955