பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்சிறப்பு கேளும், ஓய்! ஆரென்று கேட்டுவிட்டீர்; அறைகின்றேன், செவிசாயும்! ஆராரோ ஓரிரவில் ஆசைக்குள் மாலாகிச் சோராக் கலவியிலே சுகம்காணா நானுருவாய், பாரினிலே வந்துவிழப் பார்த்துப் பயப்பட்டு, கம்பத்தின் காலடியில் கைகடக்க விட்டுவிடக் கவியாய்க் கரைந்தழுத கருவிலே திருவுடைய கவிராசன் நானல்ல. ஈசன் அடியெடுக்க ஈற்றடியை நான்முடிக்கும் ஆசிபெற்ற ராசியிலே அவதரித்தோன் நானல்ல.. தம்பலத்தின் சாறுண்டு தமிழ்க்கவியாய்க் கொப்பளித்த