பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பலக் கவிராய ஆசுகவி நானல்ல. கமிசனுக்குக் கலைவிலக்கும் கணிகையரின் பஞ்சணையில் நிமிசங்கள் தவறாது நேம நிட்டை செய்தவத்தால் சுக்கான பொக்குவுடல் சுருங்க, தாதுவிழ, 'மெய்க்காதல்’ எல்லாம் மேலோன் ஒருவன்மேல் வைக்க, கவிதைவர வாடாத காமத்தைக் கக்கித் தொலைக்கின்ற கவிமகனும் நானல்ல; நானல்ல. 2 நிதிவேட்டு நிதியேற்று நீதம் மறந்துவிட்டு மதுக்குடித்த போதையிலே மண்டியெழும் புதுக்கவியைப் பிதுக்கி வெளித்தள்ளும் பெரும்புலமைத் தனறெல்லாம் எனக்குத் தெரியாது, 3 உம்மைப்போல் நானும்- உள்ளிக்கும் உப்புக்கும் - ஒருவேளை வெற்றிலைக்கும்