பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் அள்ளிப் பருகியுண அரைவயிற்றுக் கஞ்சிக்கும் நித்தம் உழைத்தலுத்தும் நெஞ்சம் அலுக்காத, மானிடன்தான் ! ஆனாலும் - வேட்டை கிடைத்ததென்று - வேற்றுவரின் கூற்றுகளை மூட்டோடு பேர்த்தெடுத்து முதன்மூலம் என்றுசொலி ரோட்டுத் தவறாமல் ரோந்து சுற்றி, தமுக்கடித்துப் பாட்டென்று சாதிக்கும் பகற்கொள்ளைக் கூட்டத்தை-- சொத்தைக் கருத்துகளைச் சொல்லில் திறனற்றுப் பொத்திப் பொதிந்து பொட்டண்மாய்க் கட்டிவைத்து, - பத்திரிகைச் சந்தையிலே பரப்பி, விலைகூவும் பாசாங்குக் காரப் பகல்வேடக் கூட்டத்தை கற்பனையின் ஊற்றென்றும் கவியரசின் கூற்றென்றும் , பற்பிடித்துப் பார்க்கும், பதம்பார்க்கும் ரசிகரென