பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் விற்பன்ன வேடம் விளைகின்ற கும்பலினை--- திண்டுமிண்டு பண்ணாமல் தீமையின்னு மிழைக்காமல் ஒண்டி வாலொடுக்க, ஊளைகளைத் தான் நிறுத்த, கண்ட துண்டமாக்கிக் - கழுகுக்கு விட்டெறியத் தண்டெடுத்த மறக்குலத்துத் தமிழன் நான். 5 'வஞ்சனைகள், மாய்மாலம் வகைத்தப்பு, வாயளப்பு. மிஞ்சிடினும் அன்னவரை . மேலோகம் தானேற்ற நெஞ்சில் உரமுண்டு ; நினைப்பில் திறமுண்டு! ஆரென்று கேட்டதற்கு அறைந்தேன்; மறக்காதீர் ! பேர்படைத்து, ஊற்றுப் பேனாவும் கை படைத்து, சீர்படைத்து, உம்போன்றார் சிரங்கொய்து சிதையேற்றி நீர் தெளிக்கும் கவியெழுத நிலத்தில் உதித்தவன்காண்! நெஞ்சில் இதை நிறுத்தும் ! 1346