பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தை மகள் அம்புஜத்தை ஆக்குப் பிரையதனில் முத்தமிடப்போக, அவள் முய லைப்போல் பயந்தோடிக் அத்தியதைக் ' கவியாக்கி,

  • காதலரின் உள்ளம் ' எனக்

கத்தரிச்ச கற்பனையில் கட்டிவைத்து, சிரஞ்சீவிச் சித்திரமாய் ஆக்கிடிலென்? இல்லையெனில்- பித்தாடும் எம்பெருமான் பேயாடும் கங்காளன்' சித்த விகாசத்துத் திகம்பரத்து லீலைகளைப் பொத்தி, புனைசுருட்டி, பொருளூட்டி, அருளுட்டி, சித்தாந்த தத்துவத்தின் சிகரமிது என்றாலென்? என்றெல்லாம்-- புத்திவழி நில்லாது புகைமுட்டித் தத்தளிக்க நிலையற்று, கற்பனையின் நினைப்பில் பிடிப்பற்று அலைப்புற்றேன், ரவுண்ட்டிச்சி ரவுண்டடிச்சி ராங்கித் தனம்பண்ணும் பவுண்டன்பேனா முனையில் பாட்டுப் பிறக்கவிலை.