பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 33 அம்மாமி அத்திம்பேர் அத்தங்கார் பாஷையிலே பம்மாத்து பண்ணுகின்ற பத்திரிகைப் புற் றீசல் பைஜாமாஸ் கல்லிஜிப்பா பாகவதர் கிராப்புடையோன் கைஜாலம் கண் ஜாலம் காட்டி நிற்க, பால்முகமும், சேல்விழியும், பாசமன ரோசனையும் , டாலடிக்கும் லோலாக்கும், . டங்கரிக்கும் காற்சிலம்பும் மேலொளியை மேலொழியா மேலாக்கும் மேற்கொண்ட காலேஜுக் குமரியவள் காருக்காய் காத்து நின்று நைஸாக வாய்திறந்து நகைக்க, ஆணழகன் ஐஸாக உருகுவதும், ஆஹா ஹா ! எத்தகைய கற்பனைகள்! எத்தகைய மறுமலர்ச்சி ! இதையெல்லாம் வளரும் தமிழென்று வக்கணைகள் பேசுகிறீர் ! உளறுகின்ற பேர்வழிக்கு ஒத்தூதிக் காட்டுகிறீர் ! ஒழியட்டும்!...