பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் நீரும் அச்சுழலில் நினைப்பைத் திரியவிட்டு பேரும் புகழுமெனும் பிச்சை விரும்பாமல் ஏறிட்டுப் பாருமையா ! - செங்குருதித் தீர்த்தத்தில் செல்வத் திருநாட்டை முங்குளித்துப் பெற்றெடுத்த முத்துக்கு --விடுதலைக்கு ஆபத்து!- கங்கை அமுதூட்டும் வங்கத்துச் செல்வமென்பீர் ! பொங்கிக் குமிழோடும் பொன்னிப் பெருக்கென்பீர் ! அங்கெல்லாம்- கஞ்சிக்கு வக்கின்றி கால்வயிற்றுக் குணவின்றி நஞ்சுக் குளிர் தடுக்க நாலுமுழத் துண்டின்றிப் பஞ்சைப் படைசனங்கள் பரிதவித்து மாளுகின்றார்! அவ்வேளை- ' வெள்ளைக் கதரணிந்து வேடமிட்டு, திரைமறைவில் கள்ளக்கடை நடத்திக் காசடிக்கும் நீசர்குழாம் சண்டானத் தனம்பண்ணி,