பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 55 சாய்மான மேசையிலே உண்டாட்டுப் படலத்தில் உன்மத்தம் ஆடுகின்றார்! கொண்டாடும் விடுதலைக்குக் கோடாலிக் காம்பானார்! அவரெல்லாம்-- தூக்குக் கயிற்றினிலே தொங்கூஞ்சல் ஆடாமல், நாக்கைப் பறித்துயிரை நமன்கையில் சேர்க்காமல், காக்கை பிடித்துயிரைக் காத்துப் பிழைக்கின்றார் ! ஆங்கொருபால்- பாரதத்து இரட்டையர்கள் பகையாடி, விடுதலையின் வேர திரக் கலகங்கள் விளைக்கின்றார்! . பெண்டுமக்கள் சீரழிய பிள்ளைகளைக் காய்கறி போல் கண்டதுண்ட மாக்கிக் கழுகுக்கு விட்டெறிய, குண்டுவிழ, புறமுதுகில் குத்துவிழ, காலிகளைக் கிண்டிவிட்டு ஒற்றுமையைக் கெடுக்கின்றார் வெள்ளையர்கள் ! நஞ்சூட்டும் வெள்ளையனின் நாஜித் தனத்தாலே பஞ்சநதி தீரத்தில் பச்சைரத்தப் பாசனமோ?