பக்கம்:ரமண மகரிஷி.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. பரம்பரை சாபம்

ரமணருடைய அதாவது வெங்கட்ராமன் என்ற சிறுவனுடைய தந்தையாரான சுந்தரமய்யர் பரம்பரையினர் முன்பொரு சமயம் ஒரு துறவிக்குப் பிச்சை இல்லை என்று கூறி அமைதியாக அனுப்பாமல் அவரை வாயில் வந்தவாறு ஏசிப்பேசி அவமானப் படுத்திவிட்டனராம்.

கோபத்தோடு காணப்பட்ட அந்தத் துறவி, சுந்தரமய்யர் பரம்பரையாளரைப் பார்த்து, “என்னைப் பார்த்தா பிச்சைக்காரன் என்று கேலி புரிந்தாய்? உனது பரம்பரையில் யாராவது ஒருவன் பிச்சைக்காரனாகி, தெருத் தெருவாக சோற்றுக்கும், துணிக்கும் அலைந்தே தீருவான் பார்!” என்று சாபமிட்டு விட்டு விர்ரென்று வீதி வழியே விரைந்தார்.

அந்தச் சாமியாரது கோப சாபத்துக்கு ஏற்றவாறு சுந்தரமய்யர் வம்சத்தில் யாராவது ஒருவர் அடுத்தடுத்து துறவு பூண்டு பிச்சைக்காரனாகவே அலைந்தார்கள். இந்தச் சாபம் சொல்லி வைத்தாற்போல சுந்தரமய்யர் பரம்பரையில் பலித்து வந்தது.

சுந்தரமய்யரின் சிறிய தகப்பனார் ஒருவர் சந்நியாசி ஆனார்! போனவர் மீண்டும் வீடு திரும்பாமல் பிச்சைக்காரனாகவே சென்று விட்டார். அவருக்குப் பிறகு அய்யரின் சகோதரர் வெங்கடேசய்யர் என்பவர், வடநாடு நோக்கி தீர்த்த யாத்திரை சென்றார். அவரும் வீடே திரும்பவில்லை. வேறொருவர் மூலமாக அவரைப் பற்றி வந்த தகவலில், சிதம்பரம் கோவிலில் அவர் பிச்சைக்காரனாக பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதோடு, கோயிலுக்கு வரும் புனித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/19&oldid=1280088" இலிருந்து மீள்விக்கப்பட்டது