பக்கம்:ரமண மகரிஷி.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

ரமண மகரிஷி


விற்றுப் பணம் கொடுத்தால் உங்களுக்குப் புண்ணியம்! என்று பணிவாகக் கேட்டுக் கொண்டதைக் கண்டு இரக்கப்பட்டார் அவர்.

உடனே. சிறுவனிடமிருந்து கடுக்கன்களை வாங்கியவர் விற்றுப் பணம் வாங்கி வரும் வரை ‘இங்கேயே இரு தம்பி. அதற்குள் உணவும் தயாராகிவிடும். சாப்பிட்டு விட்டுப் போகலாம்’ என்று சொல்லி விட்டுக் கடுக்கன்களோடு போனார் அவர்.

முத்துசாமி திரும்பி வருவதற்குள், அந்த அம்மையார் உணவைத் தயார் செய்து விட்டார். வெங்கட்ராமனைத் தன்னருகே உட்கார வைத்துக் கொண்டு அவன் வயிறார உணவை உண்ண வைத்து, வடை பாயாசத்துடன் அவர் உபசரித்தார். வெங்கட்ராமன் அன்றுதான் தனது வீட்டில் உணவு உண்டதைப் போல முழு மன நிறைவுடன் உண்டு அன்னக் களைப்பை அகற்றினார்!. கடுக்கன்களை விற்றுக் கொண்டு வந்த பணத்தை முத்துச்சாமி வெங்கட்ராமனிடம் கொடுத்து, ‘ஜாக்கிரதை தம்பி பணம்’ என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அவர் மனைவி கட்டுச் சோறு பொட்டலத்தோடு சிறுவனிடம் வந்து, தம்பி இந்தப் பொட்டலத்தில் உணவு உள்ளது. மறுபடியும் பசியெடுக்கும் போது சாப்பிடப்பா’ என்று அந்த உணவுப் பொட்டலத்தை வெங்கட்ராமனிடம் அன்போடு கொடுத்தார்.

இரண்டையும் கடவுள் கொடுத்தார் என்று வெங்கட்ராமன் பக்தியோடு அவற்றைப் பெற்றுக் கொண்டு, பசிக்குச் சோறு போட்ட அந்த இரண்டு உயிர்களது கொடைக் குணத்துக்கு நன்றி கூறி, விடை பெற்றுக் கொண்டு ரயில் நிலையம் தேடி வந்து சேர்ந்தான்! அப்போது ரயிலும் வந்ததால், திருவண்ணாமலைக்கு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ரயிலேறி அமர்ந்தான் வெங்கட்ராமன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/42&oldid=1280535" இலிருந்து மீள்விக்கப்பட்டது