பக்கம்:ரமண மகரிஷி.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

49




நுழைந்தவர்கள் எல்லாரும் சேர்ந்து வெங்கட்ராமன் என்ற அந்த இளம் துறவியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள். அப்போதும் அந்த இளம் துறவியின் தியானம் கலையவில்லை. தன்னை என்ன செய்கிறார்கள் என்றே அவருக்குத் தெரியாது. பாவம்! பூச்சிக்கடிகளால் ரத்தம் கசிந்தது. அவை கடித்த இடங்களிலே தழும்பு தழும்பாக வீக்கத்தின் அடையாளம்! காயமடைந்த அவரது உடலிலே இருந்து சீழ் வழிந்தது. இவற்றை அவர்கள் கவனித்து, இவ்வளவு வேதனைகளையுமா இந்த பால துறவி சகித்துக் கொண்டிருந்தார் என்று வியப்படைந்தார்கள்.

அதற்குப் பிறகு அந்த இளம் துறவியைக் கோபுர சுப்பிரமணியசாமி கோயிலுக்குத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அன்று முதல் வெங்கட்ராமனுக்கு பிராமண சாமி என்ற பெயர் ஏற்பட்டது.

சுப்பிரமணிய சாமி கோயிலிலே வேறோர் சாமியார் இருந்தார். அவர் பெயர் மௌனசாமி என்பதாகும். அவர் வெங்கட்ராமன் என்ற பிராமண சாமிக்கு வேண்டிய மருத்துவ சிகிச்சைகளைச் செய்து உடல் நலம் தேற்றி வந்தார். அந்தச் சாமியார் தான் உண்ணும் போது பிராமண சாமியையும் சாப்பிட வைப்பார். ஒவ்வொரு வேளையிலும் அந்தச் சாமியார் தனது உணவை பிராமண சாமியோடு பங்கீடு செய்து இருவரும் ஒரு சேர அமர்ந்து உணவு உண்டு வந்தார்கள்.

இளம் துறவியான பிராமண சாமியை மௌனசாமி கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்தார். இரவிலானாலும், பகலிலாளாலும் இருவரும் இணைந்தே எப்போதும் காணப்படுவதைக் கோவிலில் உள்ளோர் அனைவரும் கண்டார்கள்.

சில நேரங்களில் பிராமணசாமி, தனக்கு எது கிடைக்கிறதோ அதையெல்லாம் உண்டார். அபிஷேக பால் சில வேளைகளில் இரு சாமியார்களுக்கும் வரும். இருவரும் அதைக் குடித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/51&oldid=1280735" இலிருந்து மீள்விக்கப்பட்டது