பக்கம்:ரமண மகரிஷி.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

ரமண மகரிஷி




அதைப் போல ஒரு பாலயோகி குகையில் தவம் செய்கிறார் என்ற செய்தி அக்கம் பக்கம் கிராமங்கள் எல்லாம் சூடாகவும், சுவையாகவும் பரவியது. மக்கள் கூட்டம் நாளா பக்கங்களில் இருத்தும் திரளலானார்கள்.

மொட்டையடித்த தலையில் முடிகள் வளர்ந்து, கனத்து, சடைத்திருப்பதையம் கால், கை நகங்கள் கரடி போல வளர்ந்துள்ளதையும் கண்டு மக்கள் அவரை ஒரு பாலயோகி சாமியார் என்றே எண்ணவில்லை. யாரோ ஒரு பழுத்த கிழவர் சந்நியாசி வேடமணிந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்றே நம்பினார்கள்.

அந்த இளம் துறவியின் பார்வை பெற்றவர்கள் எல்லாம் நன்மை அடைந்தே வருவதாகக் கருதினார்கள். அவர்கள் எண்ணம் போல, அவரவர்கள் நினைத்து வந்த செயல்கள் நிறைவேறின. அதனால், மக்கள் இடையே அந்த பாலயோகி மீது ஒரு தெய்வ நம்பிக்கை பிறந்து, வளர்ந்து பரவியது. மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் கூடியது; எங்கெங்கு இருந்தோ அவரைத் தேடி வந்து தெய்வத்திடம் தரிசனம் பெறுவதைப் போலத் தரிசித்து விட்டுச் சென்றார்கள்.

குழந்தையில்லாத தம்பதிகள், வாழ்க்கையில் தோல்வி கண்டவர்கள், வறுமையாளர்கள், பணக் கஷ்டத்தால் அல்லல் படுவோர்கள், வியாதிகளால் அவதியுறுவோர், திருமணம் நடைபெற எண்ணுவோர், போகும் காரியம் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்போர், இத்தகைய குறைபாடுகள் உடைய மக்கள் தினந்தோறும் திரண்டு அணியணியாக வந்தார்கள்.

இரவும், பகலும் பால சந்நியாசிக்கு வேலைப் பளுக்கள் அதிகரித்தன. மக்களை ஓய்வே இல்லாமல் விசாரிக்கும் நிலை வலுத்தது. இவ்வாறான ஒரு நம்பிக்கைச் சூழல் பால யோகியிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/56&oldid=1280764" இலிருந்து மீள்விக்கப்பட்டது