பக்கம்:ரமண மகரிஷி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

55


மக்களுக்கு இருந்ததால், வெங்கட்ராமனை பெயரைச் சுருக்கமாக வெங்கட்ராமசாமியார், வெங்கட்ராம துறவி, பால சந்நியாசி, பாலயோகி, இளம் துறவி, குருமூர்த்த சாமி என்றெல்லாம் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு அன்போடும் பக்தியோடும் அழைத்தார்கள்.

மற்றும் சில மக்கள் வெங்கட் என்ற பெயரை நீக்கி விட்டார்கள். இறுதியாக ரிஷி என்றே அழைத்தார்கள். அவரைப் பார்க்க வந்த பத்திரிக்கையாளர்கள் வெங்கட்ராமர் என்ற பெயரோடு சுவாமி என்ற சந்நியாசிக் கோலத்தைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்து, வெங்கட் ராம சுவாமி என்று எழுதினார்கள்.

இந்த நேரத்தில் குன்றக்குடி மடாதிபதியான அண்ணாமலைத் தம்பிரான் சின்னசாமியை ஓர் அருளாளராகவே பாவித்து அவரது பெருமையை மக்கள் இடையே குருமூர்த்த சாமி என்றழைத்து நிலைநிறுத்தினார்.

அண்ணாமலைத் தம்பிரான் குருமூர்த்த சாமியை ஆண்டவன் தூதுவராக மதித்து வந்ததால், ஒருமுறை அவருக்குப் பால் அபிஷேகம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பாலயோகி சாமிக்கு முன்பாக, அவரைக் கடவுள் சிலையாகக்கருதி தூப தீபங்கள் காட்டி துதிப் பாடல்களும் பாடலானார்.

நாளடைவில் பால சந்நியாசியைப் பார்க்க வரும் படித்த கல்விமான்கள் அவர்மீது சில அற்புதங்களை எழுதினார்கள். வேறு சில கவிதை மனம் கொண்டவர்கள் சுவாமி மீது பாடல்கள் பாடினர். அவை சிறு சிறு புத்தகங்களாகவும் வெளி வந்து கொண்டிருந்தன. செல்வந்தர்கள் அவருக்குரிய நிதியை உருவாக்கினார்கள்.

இவ்வாறு கல்விமான்களும், கவிஞர்களும், செல்வந்தர்களும் செய்யும் அருட்பணிகள் அவரவர்கள் மனதுக்கு ஒரு முழு நிறைவை அளிக்கும் பணிகளாக அமைந்து விட்டன. அவரவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/57&oldid=1280766" இலிருந்து மீள்விக்கப்பட்டது