பக்கம்:ரமண மகரிஷி.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14. மனமே! துன்பத்தின் கர்த்தா

ந்த உலகம் தோன்றியது; அல்லது படைக்கப்பட்டது இன்பங்களை அனுபலிக்கவா? அல்லது இன்னல்களோடு போராடிக் கொண்டு இருக்கவா? என்ற ஐயம் சிலருக்கு எழுகின்றது. அந்த சந்தேகங்களுக்குப் பதில் சொல்லும் வகையில் மகரிஷி குறிப்பிட்டதாவது:

“இந்த உலகப் படைப்பு நல்லதுமன்று; அதே நேரத்தில் கெட்டதுமன்று. தன்னுடைய எண்ணங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்றவாறு மனம்தான் எல்லாவற்றையும் உண்டாக்குகின்றது.

ஒரு பெண், பெண்ணாகத்தான் இருக்கிறாள். ஆனால், ஒரு மனம் அவளை அம்மா என்று அழைக்கின்றது. மற்றொரு மனம் சகோதரி என்று கூப்பிடுகின்றது; இன்னொரு மனம் அத்தை என்று சொல்லுகின்றது. எனவே, ஆண்கள் பெண்களை விரும்புகிறார்கள். பாம்பை வெறுக்கிறார்கள்.

சாலை ஓரத்தில் கிடக்கும் கல்லையும், புல்லையும் யாரும் மதிப்பதில்லை; கவனிப்பதுமில்லை. இந்தத் தொடர்புகள் தாம் இந்த உலகத்தின் துன்பங்களுக்குக் காரணம்.

“உலகப் படைப்பு அரச மரம் போன்றது; பறவைகள் அதிலே உள்ள பழத்தைத் தின்ன வருகின்றன; அவற்றின் கூடுகளை அந்த மரத்திலே கட்டிக் கொள்கின்றன; மனிதர்கள் அந்த மரத்தின் அடியிலே களைப்பாறுகிறார்கள். ஆனால், அதே மரத்தில் சிலர் தூக்குப் போட்டுக் கொண்டு சாகின்றார்கள். மரம் அதைப் பற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/89&oldid=1281330" இலிருந்து மீள்விக்கப்பட்டது