பக்கம்:ரமண மகரிஷி.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

89


வேண்டியிருக்கும்.” என்று மகரிஷி அனைவருக்கும் அருளுரை கூறினார்.

இறையருள் பெற குரு ஒருவர் தேவை

இறைவனை நினைத்து இவ்வுலகப் பற்றுக்களை விடுதற்கும், நல்வழிகளை நாடுவதற்கும், பரமனடி அடைவதற்கும் ஒரு குருவர் தேவை. இதுபற்றி மகரிஷி கூறிய கருத்துக்கள்.

இரமண மகரிஷியை நேரில் சந்தித்து, அவரைத் தனது ஞான குருவாக ஏற்றுக் கொள்ள நினைத்த ஒருவர், “நான் பல நூல்களைக் கற்றுள்ளேன்! அவற்றை மீண்டும் மீண்டும் சிந்தித்துள்ளேன். ஒருவரை நல்வழிப்படுத்த தனியாக ஒரு குரு தேவையில்லை என்று அந்த நூல்கள் கூறுகின்றன. பல ஆண்டுகள் அந்த நூல் கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்தேன். ஆனால், ஆன்ம விடுதலைக்குச் செல்லும் கடினமான பாதைக்கு வழிகாட்டிட ஒரு ஞான குரு தேவை என்பதை இப்போது உணர்ந்து விட்டேன். மகரிஷி அவர்களே! எனக்கு ஆன்மஞான குருவாக தின்று நல்வழிப்படுத்த வேண்டுகிறேன்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு மகரிஷி என்ன பதில் கூறினார் தெரியுமா? இதோ அவை...” எல்லா வேதங்களும் ஆன்ம குரு வேண்டுமென்றுதான் அறிவுறுத்துகின்றன. நீ வேண்டிச் செல்லும் முடிவான ‘நான்’ என்பவர்தாம் குரு, ஆண்டவனை வேண்டிச் செல்பவனுடைய மனமானது அறியும் படியாக, அது ஒரு மானிட உருவம் எடுத்துக் கொள்கிறது. மானிடனின் அறியாமையைப் போக்குவதற்காகக் கடவுள் அல்லது குருதான், மனித உருவில் வருவதாகத் தாயுமானவர் கூறுகிறார்."

அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்த ராய் என்பருக்கு இதே சந்தேகம் எழுந்தது. கீழ்க்கண்ட கேள்விகளை அவர் ரமணரிடம் கேட்டுத், தனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/91&oldid=1281336" இலிருந்து மீள்விக்கப்பட்டது