பக்கம்:ரமண மகரிஷி.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

ரமண மகரிஷி



அந்த நேரத்தில் ஒருவர் கூட்டத்திடையே எழுந்து கம்பீரமான குரலில், ‘சுவாமி, நான் எந்த வழியில் போவது? என்றார்.

மகரிஷி அவ்வாறு கேட்டவரை, கையசைத்துக் காட்டி, ‘நீ வந்த வழியே போ’ என்றார்.

அப்போது இயேசு மதத்தைத் தமிழ் நாட்டில் பரப்பிட வந்த கிறித்துவப் பாதிரியார் ஒருவர் ரமணாசிரமத்துக்கு வந்திருந்தார். அவருடன் ஐரோப்பியர்கள் சிலரும் இருந்தார்கள். வந்த அந்த இயேசு மத பேச்சாளர் பைபிள் போதிப்பதில் சிறந்து விளங்கியவர்.

‘இந்தப் பாதிரி இத்தகையாளர் என்ற அடையாளம் ரமண மகரிஷிக்குத் தெரியாது. அவர் மகரிஷி முன்பு வந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். அப்படி அவர் பேசத் துவங்கியதும், அவரது நேர்முக உதவியாளர் என்று கூறிக் கொண்ட ஒரு பெண்மணி, உடனே நோட்டும் பேனாவும் ஏந்திக் கொண்டு, என்ன பேசுகிறார் பாதிரி, என்பதை எழுதிக் கொள்ளத் தயாரானார்.

பாதிரியார் எல்லா இடங்களிலும் பேசியே பழக்கப்பட்டவராதலால், சுமார் இரண்டு மணி நேரமாக ஆசிரமத்தை பிரசார மேடையாக்கிக் கொண்டார். இதை ரமண மகரிஷியைப் பின்பற்றிடும் ஆங்கிலேயே சீடர் ஒருவர் கண்டு, வெகுண்டு எழுந்து, பாதிரியாருடன் தர்க்கம் செய்ய ஆரம்பித்தார். ரமணாசிரமம் களைகட்டிவிட்டது. கூட்டமோ கூட்டம் அப்படிப்பட்ட கூட்டம் திரண்டது. அதுவரை யாரும் அந்தப் பாதிரியாரை இடை மறித்தே பேசவில்லை. திடீரென ஒருவர், அதுவும் வெள்ளைக்காரரே எழுந்து பேசுவதைக் கண்டு பாதிரி வியப்படைந்தார்.

அந்தப் பாதிரி தனக்கு பக்க பலமாக ஒரு குரல் எழாதா? தன்னைப் பின்பற்றிச் சரமாரியான கேள்விக் கணைகளை ரமணரை நோக்கி எய்திட மாட்டார்களா? தனது பேச்சுக்கும் ஏதாவது ஆதரவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/98&oldid=1281376" இலிருந்து மீள்விக்கப்பட்டது