பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் §

இருந்தார். அகன்ற நெற்றி, விசாலமான மார்பு. திரண்ட தோள்கள். இவற்ருேடு அவர் ஒரு புராதன ஆரியன் மாதிரித் தோற்றம் கொண்டிருந்தார். கீர்த்திபெற்ற கீழ்திசை அறிஞருக்கு அவருடைய தோற்றம் புத்த பெருமானின் ஒளிமயமான தரிசனத்தை நினைவூட்டும் என்று அம்ருத்ராய் எழுதினர்.ராகுலின் அருள் நிறைந்த, உயர்வான, உடல் அமைப்புபற்றி எழுதும் போது, அநேக இந்தி எழுத்தாளர்கள், தூண் (பகவத்சரண் உபாத்யாயா), ஆலமரம் (தாகூர் பிரசாத் சிங்) , இமாசலத்துக் கும் அப்பால் சென்று, அம்மலைத் தொடர்களில் ஒன்றே ஆகிவிட்ட இமயத்தின் காதலர்’ (வித்யாநிவாஸ் மிஸ்ரா) என்றெல்லாம் உவமித்து எழுதியிருக்கிருர்கள். அவருடைய அறிவு மற்றும் இதயத்தின் தன்மைகள் சமமாகவே மனதிற் பதியக்கூடியவை. அவர் சுதந்திரமான மனிதாபிமானியாகவும், விட்டுக்கொடுக்காத புரட்சிவாதியாகவும் இருந்தார்.

உத்தரப் பிரதேசத்தில், அஜாம்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுாரில், சநாதன சரயுபரிண பிராமண குடும்பம் ஒன்றில் அவர் பிறந்தார். சிறுவனுக இருந்தபோதே வேலையையும் அறிவை யும் தேடி அவர் வீட்டை விட்டு ஓடிப்போளுர். கேதார்நாத் பாண்டே என்பது அவரது பூர்வீகப் பெயர். அவர் காசியில் சம்ஸ்கிருதம், அரபு, பர்சிய மொழிகளே மரபு ரீதியாகக் கற்ருர், ஆளுல் அவர் அறிந்த இதர முப்பது மொழிகளையும் தானகவே படித்துக்கொண்டார். தனது பெயரை பாபாராம் உதார் தாஸ் என்று மாற்றினர்; சுற்றித்திரியும் யாசகர் ஆனர். புராதன சநாதன இந்துமத நம்பிக்கையை விடுத்து ஆர்ய சமாஜத்தில் சேர்ந்தார். ஆர்யசமாஜத்தின் வேதக் கொள்கைப் பிடிப்பில் அதிருப்தி அடைந்து, அவர் மஞ்சள் ஆடை தரித்து, முறையான புத்தபிக்கு ஆளுர், நேப்பாளத்திலும் பூரீலங்காவிலும் சுற்றுப் பயணங்கள் செய்த பின்னர் இது நிகழ்ந்தது. பாலி, சிங்களம், திபெத் மொழிகளில் உள்ள புத்த கிரந்தங்களைக் கற்றுத் தேர்ந் தார். மகா பண்டிதர், திரிபீடகாச் சார்யா தேரவாதப் பிரிவைச் சேர்ந்த புத்தமதப் புனித நூல்களான மூன்று பீடகங்களை யும் நன்கு கற்றவர்) என்ற பட்டங்களைப் பெற்ருர். இது அவரை லாமாக்களின் நாட்டிற்கு அபாயகரமான யாத்திரை போகும்படி தூண்டியது. அங்கு அவர் தமது உயிரைப் பணயம் வைத்து, ஊமை சாதுவாக வாழ்ந்து, திபெத் மொழியைக் கற்ருர். அவர் ஒரு புத்த சமயவாதியாக ஐரோப்பாவுக்கும் போளுர். இந்திய இயலாளர் பலரை அங்கே கண்டார். ஆயினும் ஐரோப்பா அவரை வசீகரிக்கவில்லை. பெளத்த சமயப் பிரசாரம் பண்ணுவதற்காக அமெரிக்கா போகலாம் என்ற அழைப்பையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

2