பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟盘 ராகுல் சாங்கிருத்யாயன்

வீட்டைத் துறந்தார். அவர் வீட்டை விட்டு ஓடிப்போனதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை. பரந்த உலகத்தைப் பார்க்க வேண்டும், அதிகமான அறிவு பெறவேண்டும் என்ற ஆசையே அடிப்படைத் தூண்டுதலாக இருந்தது என்று அவர் எழுதுகிருர் ஆகுல், கல்கத்தா போன்ற தலைநகரத்தில் தட்டுக்கெட்டு, விரக்தி அடைந்து, ராகுல் மறுபடியும் தனது கிராமத்துக்கே வந்தார். "999-ல் அவர், பதிருைவது வயதில், திரும்பவும் கல்கத்தா போளுர் ஒரு புகையிலைக் கடையில் உதவியாளாகப் பணி புரிந் தார். இங்கு மயக்கம் தரும் இனிப்புப் பண்டம் எதையோ தின்று அவர் மயங்கி விழுந்தார். அதனல் அவரை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியதாயிற்று. சுற்றித் திரியும் அவா. வசதியாளகை ஒரு இடத்தில் இருந்து முறையாகப் படித்து பணம் சம்பாதிக்கும் உலகியல் போக்கைத் துறக்கும் ஆசை. நாடோடி மாதிரி சஞ்சரிக்கும் ஒருவிதமான வாழ்க்கை முறை ஆகியவை இளம் ராகுலை 1910ல் வசீகரித்தன. அவர் உணர்வு மயமானவராய், அகநோக்கு உடையவராய் இருந்தார். வேதாந் தத்தைச் சம்ஸ்கிருத மூலத்தில் கற்றறிய விரும்பினர். இம்முறை சாதுக்களுடன் சேர்வதற்காக அவர் வீட்டை விட்டு வெளியேறிய போது, வேலை செய்து சம்பாதிக்கவேண்டும், அமைதியாக வாழ்ந்து சுகபோகங்களை அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்ததில்லை. வாழ்க்கைத் துறவும் உலக மறுப்பும் அல்லது பற்றற்று இருக்கும் பான்மை இதற்குள் அவர் மனசிலும் ஆன்மாவிலும் இடம்பெற்றுவிட்டது. ஆகவே, அவரது உடை மைகள் குறைவாக இருந்தன; அவருடைய ஆசைகள் அதிகம் 'ஆன்மீகமாக இருந்தன. சாதுக்களின் சகவாசம் அவரை சநாதனம் மற்றும் குருட்டுத்தனமான நம்பிக்கையின் கடும் விமர்சக ராக மாற்றியது. முடிவில் அவர் ஒரு நாத்திகராகவும், தீர்க்கமான உலகாயதவாதியாகவும் ஆளுர்-ஆளுல் இத் தத்துவ யாத்திரை மிக நெடியதாகவும் சிக்கலானதாகவும் இருந்தது.

அவருக்கு சமையல் வேலை தெரியாது. ஆரம்பத்தில் பிச்சை ஏற்று வாழ்ந்தார். நடந்தே அயோத்திக்கும் மொரதாபாத்துக்கும் போளுர். டிக்கட் இல்லாமல் ரயிலில் ஹரித்துவாரம் சென்ருர், இமயமலை அவரை வெகுவாக ஈர்த்தது. ஹரித்துவாரம் சேர்ந் ததும், அவர் தன் பள்ளித் தோழன் யாகேஷாக்கு, வசன கவிதை வடிவில், குழுக் குறியில், ஒரு தபால் கார்டு எழுதிஞர். ரிஷிகேசம், தேவபிரயாகை சென்ருர். அங்கிருந்து சிரமமான மலைப் பாதைகள் வழியாக பத்ரி-கேதார், ஜம்னேத்ரி, கங்கோத்ரி ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்தார். சுற்றித்திரிந்த சாதுக் களோடு சேர்ந்து அவரும் கஞ்சா (ஹoஸ்) புகைத்தார்; ஆயினும் அதற்கு அடிமையாகிவிடவில்லை. 1948 ஜனவரி 30-ம் நாள்,