பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆等 ராகுல் சாங்கிருத்யாயன்

அந்த மடத்தில் மேற்கொண்டு படிப்பதற்கான ஏற்பாடு எதுவும் இல்லாததனுல், ராகுல் திரும்பவும் கனெய்லா என்ற தனது கிராமத்துக்கு வந்து சில மாதங்கள் தங்கினர். ஆனல் கல்வி அறிவு பெற்று வளரவேண்டும் என்ற அவா அவரிடம் வலிய தாக இருந்தது. அதற்கு கிராமத்தில் எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, ராகுல், இருபதாவது வயதில், மீண்டும் பராசா ஆசிர மத்துக்கு வந்து சேர்ந்தார். பல்வேறு பேச்சு மொழிகள், கலாசார பூர்வகுடி இயல்களில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந் தது. போஜ்புரியில், காஷிகாவில் உள்ள மல்லியில், பஞரஸ் வட்டாரத்தில் பேசப்படும் இந்தி மொழியில் காணப்படுகிற வெவ்வேறு ரக ஒலிக் குறிப்புகள் அமைப்புகள் பற்றி அவர் எழுதி யிருக்கிரு.ர். அதேபோல் பல்வேறு இனங்களைச் சேர்ந்த பெண்கள் கொண்டாடுகிற சடங்குகள் பழக்க வழக்கங்கள் பற்றியும் அவர் விரிவாகக் கூறுகிருர் .

அறிவுப் பசி உந்தவும், ராகுல் 1913 ஜூலையில் பராசாவி லிருந்து ஓடிப்போஞர். ரயில் மார்க்கமாக ஹாஜியூர் சேர்ந்தார். டிக்கட் இல்லாமல் அசன்சால், ஆத்ரா, காரக்பூர் வழியாகப் பயணம் செய்து அவர் பூரியை அடைந்தார். இந்தப் புண்ணிய ஸ்தலத்தை தரிசித்த பிறகு ராகுல் சென்னை சென்ருர். சாது என்ற தன்மையில் அவர் சத்திரத்தில் தங்கினர். திருமலைக்கு நடந்தே போளுர். அங்கு உத்தராதி மடத்தில் தங்கினர். அவர் தமிழ் கற்க ஆரம்பித்தார். புன்னமலை, பச்சப்பெருமாள், திருமிஷி, திண்னனுர் சென்ருர். சந்நியாசியாக தெற்கில் உள்ள திருத் தலங்கள் அனைத்திற்கும் அவர் போனர். திருப்பதி, திருக்கழுக் குன்றம், காஞ்சிபுரம், ராமேஸ்வரம் எல்லாம் போளுர்.

ராமநாதபுரம், பெங்களுர், விஜயநகரம், பாகல்கோட்டை, பந்தர்பூர், பூஞ, பம்பாய், நாசிக், திரியம்பகம், கபில் தாரா, ஒந்கார்-மாண் தாதா, உஜ்ஜயினி ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்ததுபற்றி அவர் தனது சுயசரிதையில் விவரமாக வர்ணித் திருக்கிருர், உஜ்ஜயினியில் அவர் கும்ப மேளாவை கண்டார். அங்கே பெரிய சாதுக்களிடையே ஏற்பட்ட சண்டைகளிளுல் அவர் மிகுந்த வெறுப்படைந்தார். தாக்கோருக்கும் அகமதாபாத்துக்கும் போய்விட்டு அவர் 1914-ல் பராசா ஆசிரமத்துக்குத் திரும்பினர். இந்த மடத்தின் சொத்து விவகாரங்களை கவனிப்பதிலும், மடத்தை நிர்வகிப்பதிலும் அவர் மனம் ஈடுபடவில்லை. இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுப் பகுதியைச் சேர்ந்த எஸ். கங்கூலி, பிண்டிதாஸ் என்ற இரண்டு புகைப்படக் கலைஞர்கள் இந்த மடத்துக்கு வந்தார்கள். ராகுல் புகைப்படக் கலையினல் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பின்னர் அது அவருடைய பொழுதுபோக்கு