பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 霊?

வேலே ஆயிற்று. மடத்தில் வாழ்வது அவரைத் திணறடித்தது. எனவே ராகுல் ரகசியமாக அங்கிருந்து வெளியேறி, அயோத்தி சேர்ந்தார். அங்கே ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்த பிரசாரகர் களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பிரசங்கம் புரிவதற் கும் விவாதங்கள் நடத்துவதற்குமான ஒரு சங்கத்தை அவர் ஆரம் பித்தார். ஒரு பிரமச்சாரியை எதிர்த்துக் கூட்டம் நடத்தினர். அந்த பிரமச்சாரி, அயோத்திக்கும் பைஸாபாத்துக்கும் நடுவில் இருந்த காளிதேவி கோயிலில் ஆடுகளைப் பலியிடுவது வழக்கம். ராகுல் அவரை எதிர்த்ததால், சநாதனப் பூசாரிகளால் தாக்கப் பட்டார். இவ்விஷயம் போலீசில் முறையிடப்பட்டது. ஆனால், இதற்குள் ராகுல் ஒரு ஆர்ய சமாஜி, சிலைகளைத் தகர்ப்பவர், நாத்திகர் என்று பெயர்பெற்ருர்.

1915 முதல் 1922 முடிய உள்ள காலகட்டத்தை புதிய ஒளிப் பருவம் என்று ராகுல் குறிப்பிடுகிருர். அவர் பாட்டனர் இறந்து போளுர். ராகுல் நல்லபடியாய் வீட்டோடு தங்கியிருந்து நிலையான ஒரு வாழ்க்கையை வாழக்கூடும் என்று அவர் தந்தை இன்னும் நம்பிக்கொண்டிருந்தார். ஆனல் ராகுல் ஒரு புரட்சிக்காரர். அவர் வேண்டுமென்றே ரஜபுத்திரர் மற்றும் முஸ்லிம்கள் வீடுகளில் மீன்களை சமைத்து உண்டார். ஆர்ய சமாஜ நூல்கள் பல படித் தார். 1915 ஜனவரியில் அவர் ஆக்ரா போளுர். ஆர்ய முஸாபிர் வித்யாலயாவில் சேர்ந்தார். இரண்டு வருட காலம், சம்ஸ்கிருதம், அரபு மொழி, பல்வேறு மத இயல் நூல்கள், தேசிய வரலாறு ஆகியவற்றைக் கற்ருர், இந்தக் கட்டு திட்டமான வாழ்க்கை அவரிடம் எளிய வாழ்வுமீது ஒரு ஆசையையும், ஒருவிதமான தெளிவற்ற அரசியல் உணர்வையும் ஏற்படுத்தியது. பல்வேறு செய்திப் பத்திரிகைகளேயும் படித்ததனுல் இவ்வுணர்வு தூண்டி விடப்பட்டது. 1915-ல் கேதார்நாத் வித்யார்த்தி என்ற பெயரில், ஆக்ராவிலிருந்து வெளிவந்த முஸாபிர் பத்திரிகைக்கு, உர்துவில் கட்டுரைகள் எழுதலானுர். மீரத் நகரிலிருந்து பிரசுரமான பாஸ்கர்’ எனும் இந்தி சஞ்சிகையில், ராகுல் தனது முதலாவது நீண்ட இந்திக் கட்டுரையை வெளியிட்டார். குடும்பஸ்தர்களை ஏய்த்துப் பிழைக்கும் போலி சந்நியாசிகளை அதில் அவர் அம்பலப் படுத்தியிருந்தார்.

அவர் பரவலாகப் படிக்கத் தொடங்கினர். சநாதன இந்து மதத்தை எதிர்த்து ஆர்ய சமாஜிகள் எழுதிய நூல்கள், இஸ்லாம் மதத்தை விமர்சித்து கிறித்துவ இயக்கத்தினர் எழுதியவை, தர்க்கரீதியில் அமைந்த சொற்சாதுரிய உரைநடைப் புத்தகங்கள், மெளல்வி சஞஉல்லாவின் அஹ்லே ஹாதிஸ் மற்றும் அநேக காதி யானி சஞ்சிகைகள் அவருடைய படிப்புக்கு உரிய முதன்மையான