பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆盘 ராகுல் சாங்கிருத்யாயன்

விஷயங்களாயின. வைஷ்ணவத்திலிருந்து வைராகி உதாசி மதப் பிரிவைச் சேர்ந்தது, பிறகு ஆசிரம வாழ்விலிருந்து ஆர்ய சமாஜத் தைத் தழுவியது, சாதிப் பாகுபாடுகளைக் கண்டித்தது எல்லாம் பகுத்தறிவு வாதத்தை நோக்கிச் சென்ற முற்போக்கான மன யாத்திரையே ஆகும். 1915-ல் ஜபல்பூரில் மெளல்விகளுக்கும் ஆர்ய சமாஜப் பண்டிதர்களுக்குமிடையில் நடைபெற்ற பகிரங்க மத இயல் விவாதம்பற்றி அவர் எழுதினர். எவ்வாறு அவர்கள் நூல் களிலிருந்து ஆதாரங்கள் எடுத்துச் சொன்னர்கள், விவாதம் எப்படி இரண்டு நாட்கள் நடைபெற்றது என்பதை விரிவாக எழுதியிருந்தார். பின்னர் குரானே தேவநாகரி எழுத்தில் எழுதும் பணியும், அதை இந் தி யி ல் மொழிபெயர்க்கும் வேலையும் அவருக்குத் தரப்பட்டன. ஆளுல் சன்மானம் மிகவும் கம்மியாக இருந்தது. ஆகவே அவர் அதை விட்டுவிட்டார். அவர் ஆக்ராவில் மாணவராக இருந்தபோது, கோமகட்டமாரு சம்பவம் நிகழ்ந்தது. அதில் வீர சீக்கியர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி, உயிர் நீத்திருந்தார்கள். இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் இளம் புரட்சிக்காரரின் உள்ளத்தில் கிளர்ச்சி உண்டாக்கியவாறு இருந்தன.

1918-ல் ராகுல் தனது சம்ஸ்கிருதப் பயிற்சியைத் தொடர்வது எனத் தீர்மானித்தார். எனவே லாகூர் சென்ருர் . பஞ்சாபி மொழியோடும் பெண்களோடும் அவருக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு வெகு சுவாரஸ்யமானது. கோடா என்ற ஊரில் ஒரு பஞ்சாபி அழகியை அவர் சந்திக்க நேர்ந்தது. அப்போது கதாசப்தஷதி என்ற காவியத்தின் நினைவு அவருக்கு இயல்பாக எழுந்தது. டில்லி மற்றும் ஹரியான வழியே அவர் பிரயாணம் செய்கார். அந்த சந்தர்ப்பத்தில் லாகூர் ஆர்ய சமாஜி இயக்கத்தின் கோட்டையாக விளங்கியது. சுதந்திர சிந்தனைப் போக்கு அவரைக் கவர்ந்தது. எனவே அவர் ஆசிரம வாழ்வை நேசிக்கும் சாதுக்களே விட்டுப் பிரிந்தார். ஆர்ய சமாஜம்கூட கோட்பாட்டில் முரட்டுப் பிடிவாதம் கொண்டதாகவும், பல தன்மைகளில் ஒரு குருட்டுச் சந்து ஆகவும் அவருக்குத் தோன்றியது, எட்டாவா, கான்பூர், லக்னெள ஆகிய இடங்களில் இருந்த ஆர்ய சமாஜ அலுவலகங்கள் பலவற்றுக்கும் ராகுல் போளுர், ஆளுல் இந்த ஆர்ய முஸாபிர்" எந்த இடத்திலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ராய் பரேலியில் அவர் இந்தி மொழி மற்றும் இலக்கியம்பற்றி ஒரு சொற்பொழி வாற்றினர். தயார் செய்யாமலே பேசிய பேச்சு அது. பிறகு காசியில் பல பிரசங்கம் புரிந்தார். அகாரோராவில் அவர் தந்தை மீண்டும் அவரை அணுகினர்; கிராமத்துக்கு வந்து வீட்டோடிருந்து நிலங்களை கவனித்துக்கொள்ளும்படி வேண்டிஞர். ஆனல் ராகுல், தான் ஒருமுறை துறந்து வந்த வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு