பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 19

இணங்கவில்லை. அந்நாட்களில் ராகுல் சம்ஸ்கிருதத்தில்தான் கடிதங்கள் எழுதிவந்தார். 1922-ம் வருஷத்தில், பிப்ரவரி 13 முதல் ஆகஸ்ட் 9 முடிய உள்ள அவரது டயரிக் குறிப்புகள்கூட சம்ஸ்கிருதத்தில்தான் எழுதப்பட்டிருக்கின்றன. அப்போது அவர் ஒரு அரசியல் கைதியாக பக்லார் சிறையில் இருந்தார். சிற்சில இடங்களில் சம்ஸ்கிருதம், அரபு, உருது, இந்தி மொழிகளில் கவிதை வடிவத்தில் எழுதவும் முயன்றிருக்கிரு.ர். அகாரோராவி லிருந்து ஒடிப்போக அவர் திரும்பவும் முயன்ருர் . மனம்முறிந்த அவர் தந்தை பஞரஸ் வரை அவரைத் தொடர்ந்தார்; ராகுலின் மனசை மாற்றப் பெரிதும் முயன்ருர், ஆனல் தோல்வி கண்டார். இதுதான் அவருக்கு தந்தையுடன் ஏற்பட்ட கடைசிச் சந்திப்பு ஆகும். பின்வந்த பல வருடங்களுக்கு ராகுல் தனக்கென்று ஒரு வீடு பெற்றிருந்ததே இல்லை. ஐம்பது ஆண்டு பூர்த்தியாகிறவரை தனது சொந்த மாவட்டமான அஜாம்காருக்குத் திரும்பக்கூடாது என்று ராகுல் உறுதி பூண்டார். அதை அவர் காப்பாற்றினர்.

1918-ல் ரஷ்யப் புரட்சிபற்றி, உருது, இந்தி, இங்கிலீஷ் செய்திப் பத்திரிகைகளில் ராகுல் சில செய்திகளை வாசித்தார். "புதிய அட்லாண்டிஸ் அதாவது கற்பனலோகம் ஒன்றை, இலட்சிய கம்யூனிச சமுதாயத்தைப்பற்றி அவர் சிந்திக்கலானர். அதுபற்றி 1922-ல் சம்ஸ்கிருத செய்யுள் வடிவத்தில் ஒரு குறிப்புகூட எழுதினர். 1923, 24-ல், ஹஜாரிபாக் சிறையில் இருந்தபோது, பைலாவின் லாதி (இருபத்திரண்டாம் நூற்ருண்டு) என்ற புத்தி கத்தை அவர் எழுதினர். அது அவருடைய அரசியல் இலட்சியக் கனவை, புத்தக வடிவத்தில் பூர்த்தி செய்தது. 1919 ஏப்ரல்-மே யில் லாகூரில் நடைபெற்ற ஊரடங்குச் சட்ட ஆட்சியை ராகுல் கண்டு அனுபவிக்க நேர்ந்தபோதுதான் அரசியலோடு அவருக்கு முதல் முறையாக உண்மையான சந்திப்பு நிகழ்ந்தது. இங்கே ஒரு புதிய அறைகூவல் எதிர்ப்பட்டது. ஆசிரம முறையின் சம்ஸ்கிருத தெய்வீக இயல் முஸ்திப்போ, ஆர்யசமாஜி முறையின் எத்தனமோ எந்தவிதத்திலும் பயன்பட முடியாத தளம் அது. 'ஓ டயர். ஷாஹியின் இருண்ட நாட்கள் பிரிட்டிஷ் ஆட்சியின்மீது ஒரு புதிய வெறுப்பு அலையைக் கிளப்பிவிட்டன. அநேக இந்தியர்களின் முகமூடி கிழிக்கப்படுகிறது என்று ராகுல் எழுதுகிரு.ர். சம்ஸ்கிருத சாஸ்திரி பரீட்சையில் ராகுல் தோல்வி அடைந்தார். அவருடைய தீவிரக் கருத்துக்களே காரணமாகும். பின்னர் ராகுல் சித்திர கூடம் சென்ருர். அங்கு காசி நியாயமத்யமா பரீட்சை சம்ஸ் கிருதத்தில் எழுதினர். அதிலும் தோல்வியே அடைந்தார். ஆனல், கல்கத்தா மீமாம்ஸா பரீட்சையை ஜபல்பூரில் எழுதியதில் முதலா வது வகுப்பில் தேர்ச்சி பெற்ருர், -