பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை *#3

சம் (வசிய வித்தை) கற்றிருந்தார். அதை இந்த லாமாக்கள்மீது பிரயோகித்து அவர்களைத் தன்வயப்படுத்தினர். 18,000 அடி உயரம் மலைமீது ஏறி கார்டோங் வா எனும் இடம் சேர்ந்தார். அறுபது வயது ரிஸோங் லாமாவை சந்தித்தார். துப்ராவிலிருந்து லே சென்ருர், மன்-பங்-காங் ஏரி, சுமூர்த்தி கினர் வழியாக அவர் சிம்லா திரும்பினர். நாடோடிகள் மட்டுமே பிரயாணம் செய்யும் பாதைகள் வழியே ராகுல் செய்த பயங்கர யாத்திரைகள் 1926-ல் திபெத்திய எல்லையில் தொடங்கின. அவர் வழியில் கண்டு உடன் இட்டுச் சென்ற செங்-துக் என்ற சின்ன திபெத்திய நாய் ஒன்றின் மரணம் பற்றி அவர் உள்ளத்தைத் தொடும் வகை யில் விவரிக்கிருர்: 'என் அருமைப் பெற்ருே.ரின், மற்றும் அன்புக் குரிய பாட்டன்மார்களின் மரணத்தின்போது கூட நீர் சுரக்கர்த என் கண்கள் இந்தச் செல்ல நாயின் சாவினல் கட்டுப்படுத்தமுடி யாத அளவுக்கு கண்ணிர் சிந்தின. இந்த நாய்க்கு ஒரு இரங்கற் பாவாக நான் சம்ஸ்கிருதத்தில் எட்டு சுலோகங்கள் எழுதினேன். ஒவ்வொரு பாடலும் செங்-துக்கே த்வத் பிரயானே! என்று முடியும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். r.

மேற்கத்திய திபெத்தை இப்படி முதல் தடவையாகப் பார்த்த பிறகு ராகுல் புஷாகார் மாநிலம் சேர்ந்தார். ஸம் நாம், களும், சீனி, ஸ்பிதி ஆகிய இடங்களுக்குப் போளுர். கோட்துவாராவில் மிஸ்டர் ஸ்டோக்ஸ் எனும் ஆப்பிள் பழத் தோட்டக்காரரை சந்தித்தார். சிம்லாவுக்கு வந்தார். பீகார் திரும்பியதும், ராகுல் மீண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். குடியானவர்கள் நிறைந்த பெரிய கூட்டங்களில், ராஜேந்திரப் பிரசாத் கூடச் சேர்ந்து, அவர் சாப்ரா பேச்சு மொழியில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். 1926-ல் கெளஹாத்தி காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். மஸ்ருல் ஹக்கை ஃபரித்பூரில் சந்தித்தார். ஆன்மீக விஷயமான புத்தகங்கள் கொண்ட அவருடைய பெரிய நூலகத்தைப் பார்வையிட்டார். 1927 மார்ச் 30-ல் அவ்ர் பராசாவை கடைசித் தடவையாகக் கண்டார். ஜமீந்தாரி (நிலப் பிரபுத்துவ) முறை ஒழிக்கப்படுகிறவரை அந்த ஊருக்குத் திரும்புவதில்லை என்று உறுதிபூண்டார்.

கல்கத்தாவில் மகா போதி சங்கம் அவருக்கு உதவியது. வித்யாலங்கார் பரிiளுவில் சேர்வதற்காக அவர் பூரீலங்கா சென்ருர், பத்தொன்பது மாதங்கள் (16 மே 1927 முதல் 1 டிசம்பர் 1928 முடிய) அவர் புத்தமத நூல்களைக் கற்ருர். இந்திய கலாசார வரலாறுபற்றிய தனது ஞானத்தையும் விரிவுபடுத்திக் கொண்டார். ஹஸாரிபாக் சிறையில் இருந்தபோது அவர் பிராஹ்மி எழுத்துக்களைக் கற்றிருந்தார்; எயிகிராபிகா இண்டிகா