பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 31

பாத்ஸ்கியும் சேர்ந்திருந்த படங்களையும் இகாரின் சிறு பருவ போட்டோக்களையும் கொண்ட ஆல்பம் ஒன்றை அவள் காட்டி ஞள். லோலாவும் இகாரும் இந்தி பேசவில்லை; அவர்களிடம் ராகுல் எழுதிய புத்தகம் ஒன்றுகூட இல்லை. அவ்விருவரில் எவரும் இந்தியாவுக்கு வந்ததுமில்லை. - -

ராகுல் அரசியலில் தீவிரப் பங்கேற்றர். 1939-ல் பீகாரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் அவர் பூரணமாக ஈடு பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையின் மோசமான நிலைமைகளை எதிர்த்து இரண்டு தடவை உண்ணு விரதம் இருந்தார். ஒருமுறை 10 நாட்களும், மறுமுறை 17 நாட் களும், சில மாதங்களுக்கு விடுதலை பெற்ருள். மோதிஹாரியில், 1940 பிப்ரவரி 24-25 தேதிகளில் நடைபெற்ற கிசான் சம்மே ளனத்திற்கு அவர் தலைமை தாங்கினர். மீண்டும் கைதானர். 1940-42-ல் 29 மாதங்கள் அவர் ஹஜாரிபாக், தேவாலி சிறை களில் இருந்தார். ராகுல், தர்ஷன்-திக்-தர்ஷன் (847 பக்கங்கள்) போன்ற மகத்தான நூல்களை எழுதுவதில் இத் தண்டனை காலத் தைச் செலவிட்டார். கிரேக்க, இஸ்லாமிய, ஐரோப்பிய, இந்திய தத்துவ முறைகளை விமர்சன ரீதியில் ஆய்வு செய்து, மார்க்சீயக் கண்ளுேட்டத்தில் விளக்கவுரை தரும் இம் முயற்சியை அவர் முதல் முறையாக இந்தியில் எழுதினர். மூவாயிரம் வருடத்திய தத்துவ சிந்தனைகளை, ஒரு புதிய பகுத்தறிவுவாத-மனிதாபிமானக் கண் ணுேட்டத்தில் ஆராயும் மிகப் பெரிய படைப்பு ஆகும் அது.

அயல் நாட்டு மற்றும் இந்திய தத்துவஞானிகளை ஒப்பிடும் அட்டவணை ஒன்றில், நவீன இந்திய சிந்தனையாளர்கள் இரண்டு பேரை மட்டுமே ராகுல் குறிப்பிடுகிருர்; அவர்களது சமகால அயல் நாட்டினர் பேர்களையும் தந்திருக்கிருர், - --

ஹெகல் (1770-1831) - ராஜாராம் மோகன் ராய் (1774 – 1829) மார்க்ஸ் (1818-83) - தயானந்த் (1824-83) அயல் நாட்டு சிந்தனையாளர்களில் அநேகம் பேர்களின் பட்டி யலையும் அவர்களது சாதனைகளையும் விவரித்திருக்கிருர்-தெக் கார்தே, லிபினேஸா, லாக், பெர்க்வி, வால்டேர், ஹ்யூம், ரூசோ, கான்ட், ஃபிக்டே, ஷெல்லிங், ஷோபஞர், ஃப்யூவர் பாக், ஸ்பென்சர், எங்கெல்ஸ், மாக், வில்லியம் ஜேம்ஸ், நீட்ஷே. பிராட்லி, பெர்க்ஸன், ஒயிட் ஹெட், லெனின், பெர்ட்ரண்ட் ரஸல் ஆகியோர் பற்றி எழுதியிருக்கிருர். இந்த மாபெரும் நூலுக்கு சான்று ஆதாரங்களாக அவர் சிறையில் பயன்படுத்திய நூல்கள் என் ஏகப்பட்ட சம்ஸ்கிருதப் புத்தகங்கள். பாலி. அரபு மற்றும் பாரசீக நூல்களின் பெயர்களை குறிப்பிடுகிருர், தத்துவம்