பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ராகுல் சாங்கிருத்யாயன்

ஒழுக்கசீலமும்கொண்ட அவர் ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் உழைக்க முடிந்தது. அவரது தேவைகளும் பொழுது போக்குகளும் குறைவானவையே, மிக எளிய உடையையும் உணவையும் அவர் உபயோகித்தார். நண்பர்களுக்கும், இளைய படிப்பாளிகளுக்கும் அதிக அளவு உதவினர். ஒளிவுமறைவு இன்றிப் பேசிஞர். அச்சமற்று வாழ்ந்தார். பதவியிலும் செல் வாக்கிலும் வெகுவாக உயர்ந்திருந்தவர்களை விமர்சிக்கவும், அவர் கள் மனசைப் புண்படுத்தவும் அவர் தயங்கவேயில்லை. அவருடைய கொள்கைகள் விஷயமாகப் பேச நேர்கையில், அவர் வெளிப்படை யாகப் பேசிஞர்; உண்மையைச் சொல்வதில் அவர் பூசிமெழுகிய

அவர் தனது ஒய்வு நேரத்தைப் பெரும்பாலும் எழுதுவதிலும் படிப்பதிலும் ஈடுபடுத்தினர். எழுத்தில் அவர் வேகமும் கோபமும் காட்டியபோதிலும், தனிப்பட்ட முறையில் மென்மையாகவும், வார்த்தைகனே நிதானமாகவும் பேசுகிறவராகவே இருந்தார். அவர் பெரிய மேடைப் பேச்சாளர் அல்லர். முப்பத்துநான்கு, அல்லது அதற்கும் அதிகமான மொழிகளை அறிந்திருந்தபோதி லும், அவர் அநேகமாக சம்ஸ்கிருதத்தையும் இந்தியையும் தான் எழுதவும் பேசவும் பயன்படுத்தினர். பேச்சிலும் புத்தகங்களிலும் அவர் உபயோகித்த மொழி மிக எளியதாக இருந்தது. அவர் எப் போதும் சாதாரண வாசகனை தன் நினைவில் கொண்டிருந்தார். சில சமயம் அவர் எழுத்தில் ஒரு தீவிர உற்சாகியின் அல்லது ஒரு மதப்பிரசாரகனின் ஒருபக்கச் சார்பு காணப்படும்; ஆளுல் அவருக்குக் கொள்கைவெறி என்பது இருந்ததில்லை. மிகத் தாழ்ந்த நிலைகளிலிருந்து மேனிலை அடைந்த ஒருவருக்கு, பெரும் பாலும் தாளுகவே கற்றுத் தேர்ந்தவருக்கு, இத்தகைய முற்போக் கான, பகுத்தறிவுரீதியான, மதச்சார்பற்ற, மனிதாபிமான நிலையைப் பெறுவதும் போற்றி வளர்ப்பது என்பதும் உண்மையி லேயே விசேஷமான ஒரு சாதனைதான். மறைபொருள் வாதிகள், மாயாவாதிகள், போலி ஆன்மீகவாதிகள் சம்பந்தமான குறிப்பு களில் அங்கும் இங்குமாக அவர் கடுமையான வார்த்தைகளை உபயோகித்திருக்கிருரே தவிர, ராகுல் எவரையும் வெறுப்பவர் இல்லை. விஷயங்களின் மறுபக்கத்தைப் பார்க்கவும், ஒவ்வொன்றி இம் ஏதாவது நல்லதைக் கண்டுபிடிக்கவும், விழுங்கமுடியாததாக வும் விநோதமானதாகவும் தோன்றியதைக்கூடப் புரிந்துகொள்ள வும் அவர் முயன்ருர். புத்தரின் கொள்கையான கருணையைக் கற்றுத் தேர்ந்ததின் விளைவாகப் பிறந்த அனுதாப உணர்வு உள்ளார்ந்து இருப்பதனால், அவருடைய வாழ்வும் இலக்கியமும் வாசகரிடம் ஒரு ஆழ்ந்த, நிலையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தின் கலப்பான நிகழ்வுகளைப் புரிந்து