பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 3荔

கொள்ள ராகுல் முயன்ருர். இச்செயல் முறையில், சமநியுேம் ஒருங்கிணைப்பும்கொண்ட ஒரு புதிய சுய மனிதனைத் தேடினர்.

ராகுல் கற்பளுலங்காரவாதியோ, மிகை உணர்ச்சிவாதியோ அல்லர். இதர மனிதர்களுடன், அவர்கள் மேலானவர்களோ மூத்தவர்களோ, சமமானவர்களோ இளையவர்களோ, யாராக இருப்பினும், அவர் ஒரு நண்பன்போல, உண்மையைத் தேடும் ஆத்மாபோல் பழகினர். அவர் இருண்ட நோக்கினருமல்ல, குறை கூறுபவருமில்லை. துமாசி கூடிாயா என்ற அவருடைய நூலில் செய் திருப்பதுபோல, சில அமைப்புகளையும் மனித விக்கிரகங்களையும் எதிர்த்து மறுக்கும் போக்கை அவர் தீவிரமாக ஆதரிக்கிரு.ர். அரசியல் ஹாம்லெட்டுகளே (துன்முன் என்ற போஜ்புரி நாடகத் தில்) அவர் கேலி செய்கிருர் ஆண்மீது பெண் செலுத்துகிற ஆதிக்கத்தை மிக நளினமான நகைச்சுவையோடு விவரிக்கிருர்; அதன்மூலம், புனித ஆசாமிகள் என்று சொல்லிக்கொள்கிற போலி நபர்களின் பொய்யான உபதேசங்களுக்கும் நேர்மாரு:ன செயல் களுக்குமிடையேயுள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்துகிரு.ர். ஆனல், எல்லா இடத்திலும் சுய அறிவு ஒளி வீசுகிற ஒரு ராகுலின் கருணைமுகம் எப்போதும் மறைந்து இருக்கிறது; எனினும் அது முற்ருக மறைந்துவிடுவதுமில்லை. -